​எப்போது வளர்கிறீர்கள்

பிறந்த குழந்தை 1 வயது முதல் பருவமடையும் காலம் வரை ஒவ்வொரு வருடத்திலும் 2 அங்குலம் வரை வளர்கிறார்கள். பருவ வயதுக்கு பிறகு தான் ஆண்டுக்கு 4 அங்குலம் வரை வளர்ச்சி அடைகி றார்கள். பதின்ம வயதை அடைந்த ஆணும், பெண்ணும் பூப்படைந்த பின்னும் வேகமாக வளரும் காலம் இது.


அதனால் தான் பிள்ளை வளர்த்தி காலத்தை முன்னோர்கள் குழந்தை பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், வளரும் பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், பூப்படையும் பருவத்தில் ஒரு வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து பிள்ளை பேறுக்கு பிறகு ஒரு வளர்ச்சியும் என்று சொல்வார்கள்.


இந்த வளர்ச்சி விகிதம் எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. சில பிள்ளைகள் மரபு வழியாக அவர்களது மூதாதையர்கள் உயரத்துடன் இருந்தால் அவர்களை போன்று அதிக உயரமாக வேகமாக வளர்வார்கள். அதே நேரம் அவர்கள் பரம்பரையில் பெரும்பாலும் உயரம் குறைவாகவே இருந்தால் இவர்களது உயரமும் அதே அளவு வளர்ச்சியில் இருக்கும். இதில் அதிக வேறுபாடு இருக்காது. எனினும் உணவு பழக்கம் உடற்பயிற்சி மூலம் உங்கள் உயரத்தை சற்று அதிகரிக்க முயற்சி செய்யலாம்.