குழந்தைகளின் வளர்ச்சி என்பது ஆரோக்கியமான உடல் மட்டுமல்ல. ஆரோக்கியமான உயரத்திலும் உண்டு. பல அம்மாக்களும் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க ஊட்டச்சத்தும் உடற்பயி ற்சி யும் போதும் என்று நினைக்கிறார்கள் இவையெல்லாம் எந்த அளவுக்கு பலன் தரும் பார்க்கலாமா?
உயரமாக வளர உதவுவது எது
இந்த ஊட்டசத்து பானங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்கும். இந்த பானம் உங்கள் குழந்தை யின் அறிவாற்றலை தூண்டும் என்னும் விளம்பரங்கள் உண்மையில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறதா?
இவையெல்லாம் உண்மையில் குழந்தையின் உயரத்தை அதிகரிக்குமா என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும் இருக்கும் வழிமுறைகளை எல்லாம் அம்மாக்கள் செய்து பார்த்துவிடுகிறார்கள்.
ஆனால் அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். குழந்தைகளின் உயரத்தை உறுதி செய்வது மரபணுக்கள் தான். இவைதான் 60 முதல் 80 சதவீதம் வரை பங்குவகிக்கின்றன. மீதி இருக்கும் 20 சதவீதம் மட்டுமே ஊட்டசத்து மற்றும் உடற்பயிற்சிக்கு காரணமாக அமைகின்றன
எப்போது வளர்கிறீர்கள்