பிறர் மீது குற்றம் சொல்லியே பிழைப்பு நடத்தும் கட்சி திமுக - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி.


மதுரை


 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பால்வளதுறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,

 

தென் மாவட்டங்கள் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் மு.க.அழகிரி.அவருடைய எதிர்காலத்தை திட்டம் போட்டு பாழாக்கியவர் சகோதரர் ஸ்டாலின்.அழகிரியை குடும்பத்தை விட்டே துண்டித்தவர் 

ஸ்டாலினின் தந்திரமான நடவடிக்கை.உண்மையான வெளிப்பாடு தான் அழகிரி அண்ணன் அவர்களின் பேச்சு.

அவர்க்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நாட்டின் பொருளாதார சிதைவுக்கு காரணம் நாட்டை காங்கிரஸ் ஆண்டது தான்.

காங்கிரஸ் ஆண்ட காலம் இந்தியாவின் இறந்த காலம்.

இந்தியா வளர்ந்த நாடாகவும் வல்லரசு நாடகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் பிரதமர்  நரேந்திர மோடி தான் என்று கூறினார்.